ரெயில் முன் பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை
பங்காருபேட்டை அருகே சிறுநீரகம் செயலிழந்ததால் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
பங்காருபேட்டை
தச்சு தொழிலாளி
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா உன்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜூ என்கிற புட்டண்ணா (வயது 56). தச்சு தொழிலாளியான
இவர் கடந்த சில ஆண்டுகளாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.
இதனால் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதனால் அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இதன்காரணமாக முனிராஜூ வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார்.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
இந்த நிலையில் நேற்று கிராமத்தை ஒட்டியுள்ள ரெயில் தண்டவாளத்திற்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ரெயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.
ரெயில்வே தண்டவாளத்தில் அவர் உடல் சிதறி பிணமாக கிடந்ததை பார்த்த மக்கள் பங்காருபேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணை
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பங்காருபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், சிறுநீரகங்கள் செயலிழந்ததால் வாழப்பிடிக்காமல் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பங்காருபேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.