தேர்தல் விதிகளை மீறி அரசியல் சின்னங்கள்: 452 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு


தேர்தல் விதிகளை மீறி அரசியல் சின்னங்கள்: 452 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதிகளை மீறி அரசியல் சின்னங்கள் வைத்து இயக்கியதாக 452 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.

பெங்களூரு:

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

கர்நாடகத்தில் மே மாதம் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகள் சார்பில் முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி சின்னங்களை அகற்ற வேண்டும் எனவும், அகற்றாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும் அவற்றை முறையாக கண்காணிக்கவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது தேர்தல் விதிகளை மீறி ஆட்டோக்களில் அரசியல் சின்னங்களை வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

452 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி ஆட்டோக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை விதிகளை மீறியதாக 452 ஆட்டோக்கள் மிது வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் அவர்களிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மீண்டும், மீண்டும் விதிமீறில்களில் ஈடுபடுபவர்களின் ஆட்டோ உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறுகையில், கொரோனா காலத்தில் எங்கள் வாழ்வாதாரம் பாதித்தது. அப்போது, அரசியல் பிரமுகர்கள் ஆட்டோக்களில் பேனர்கள், போஸ்டர்கள் மூலம் பிரபலப்படுத்தி கொண்டனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் மீண்டது. சிலர் இலவசமாக ஆட்டோவின் மேற்கூரையை வழங்கினர். அதில் அவர்களது விளம்பரமும் இடம் பெற்று இருந்தன. தற்போது அதை எடுக்க முடியவில்லை என்றார்.


Next Story