வன்முறை சம்பவம் எதிரொலி: சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு..!
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலம் புங்கனூரில் நடந்த வன்முறை சம்பவம் எதிரொலியாக முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சந்திரபாபு நாயுடு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது கொலை முயற்சி, கலவரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மோதல் தொடர்பாக சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, புங்கனூரில் நடந்த வன்முறை சம்பவத்திற்காக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மீது ரவுடி சீட் வெளியிட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி குடிவாடா அமர்நாத் கோரிக்கை விடுத்திருந்தார்.
Related Tags :
Next Story