வருமான வரித்துறை அதிகாரியை மிரட்டியதாக தெலுங்கானா மந்திரி மல்லா ரெட்டி மீது வழக்கு பதிவு
தெலுங்கானா மந்திரி மல்லா ரெட்டி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
ஐதராபாத்,
தெலுங்கானா அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மல்லா ரெட்டி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரியை மிரட்டி துன்புறுத்தியதாக தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் மல்ல ரெட்டியின் மகன் பத்ரா ரெட்டி சார்பில் வருமான வரித்துறை அதிகாரி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
மல்லாரெட்டியின் மூத்த மகன் மகேந்தர் ரெட்டி அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மகேந்தர் ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரி, சில ஆவணங்களில் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த இரு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.