சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட வேண்டும்- பி.கே.ஹரிபிரசாத் எம்.எல்.சி. வலியுறுத்தல்


சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட வேண்டும்- பி.கே.ஹரிபிரசாத் எம்.எல்.சி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:46 PM GMT)

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பி.கே.ஹரிபிரசாத் எம்.எல்.சி. வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.கே.ஹரிபிரசாத் எம்.எல்.சி. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சில காரணங்கள்

கர்நாடக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் சித்தராமையா முதல்-மந்திரியாக உள்ளார். அதனால் அந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட வேண்டும். எங்கள் தலைவா் ராகுல் காந்தி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சொல்கிறார்.

கர்நாடக அரசு நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? என்பது தெரியவில்லை. ஆனால் அந்த அறிக்கையை கட்டாயம் வெளியிட வேண்டும். அந்த அறிக்கை வெளியாகாமல் இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம். அந்த அறிக்கை குறித்து மக்கள் விவாதிக்க வேண்டும். அதற்கு அரசு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அந்த அறிக்கையில் குறைகள் இருந்தால் மீண்டும் ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தலாம்.

நோட்டீசு அனுப்பவில்லை

கர்நாடகத்திற்கு ஏற்கனவே ஹவனூர் ஆணையம், சின்னப்பரெட்டி ஆணைய அறிக்கைகள் உள்ளன. பா.ஜனதா ஆட்சியிலும் ஒரு கணகெடுப்பு நடத்தப்பட்டது. சட்டசபை, மேல்-சபையில் விவாதம் நடைபெற்ற பிறகே அந்த அறிக்கையை செயல்படுத்த முடியும். லிங்காயத் சமூகத்தினரின் அதிகாரிகளுக்கு உரிய பதவிகள் கிடைப்பது இல்லை என்று சாமனூர் சிவசங்கரப்பா கூறியுள்ளார். அதுபற்றி நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கூறிய கருத்துக்காக எனக்கு நோட்டீசு அனுப்பினர். அவருக்கு நோட்டீசு அனுப்பவில்லை. கட்சிக்கு என் மீது அன்பு அதிகம்.

இவ்வாறு பி.கே.ஹரி பிரசாத் கூறினார்.


Next Story