காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு


காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு
x

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

புதுடெல்லி,

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருந்தார். மேலும், கர்நாடக அரசு மேகதாது அணையின் திட்ட வரைவு அறிக்கை குறித்து எழுத்துபூர்வமாக வாதங்களை முன்வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story