காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு


காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும்  ஒத்திவைப்பு
x

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.டெல்லியில் நாளை நடைபெற இருந்த 16-வது கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் கர்நாடக அரசின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜூன் 17, 23 தேதிகளில் நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story