முன்னாள் எம்.பி கொலை வழக்கில் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் கைது


முன்னாள் எம்.பி கொலை வழக்கில் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் கைது
x

முன்னாள் எம்.பி கொலை வழக்கில் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமராவதி,

ஆந்திரா முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் ஆந்திராவின் முன்னாள் மந்திரியுமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி படுகொலை வழக்கில் ஜெகனின் மற்றொரு உறவினரான ஒய்.எஸ்.பாஸ்கர ரெட்டி சிபிஐயால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடப்பா லோக்சபா தொகுதி எம்பியான அவினாஷ் ரெட்டியின் தந்தைதான் ஒய்.எஸ். பாஸ்கர ரெட்டி. ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினருமான ஒ.எஸ்.பாஸ்கர ரெட்டி அதிரடியாக சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளதுஜெகன் மோகன் ரெட்டிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story