ரூ.2,040 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கு: பொம்மை தயாரிப்பு நிறுவனம் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை


ரூ.2,040 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கு: பொம்மை தயாரிப்பு நிறுவனம் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை
x

கோப்புப்படம்

ரூ.2,040 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில், பொம்மை தயாரிப்பு நிறுவனம் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்க்ல் செய்துள்ளது.

புதுடெல்லி,

ஹனங் டாய்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் நிறுவனம், பொம்மைகளை தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டுவரை தனது நஷ்டத்தை மறைத்து, கணக்கு புத்தகங்களில் பொய்யான விவரங்களை எழுதி, நிதிநிலைமை நன்றாக இருப்பதுபோல் காட்டி உள்ளது. அதை வைத்து பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 12 வங்கிகளில் ரூ.2 ஆயிரத்து 40 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. 2 ஆண்டுகள் விசாரணை நடத்தி இதை கண்டறிந்துள்ளது. டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஹனங் டாய்ஸ் நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் அசோக்குமார் பன்சால், இயக்குனர் அஞ்சு பன்சால் மற்றும் உயர் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


Next Story