சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: நாடு முழுவதும் 94.4% மாணவர்கள் தேர்ச்சி
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
புதுடெல்லி,
சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 24 வரை தேர்வு நடைபெற்றது.
இதன் முடிவுகள் வெளியாக நீண்ட நாட்களாக தாமதமான நிலையில், இன்று (ஜூலை 22) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாணவிகள் 94.54 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.25 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.தேர்வு எழுதிய மாணவர்கள் https://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவு எண், பள்ளிக்குறியீடு எண், அட்மிட் கார்டு எண் உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து தங்களது முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம். மேலும், cbse12 என டைப் செய்து இடைவெளிவிட்டு, பதிவு எண்ணை டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பியும் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 98.78% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.68% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 20,93,978 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.