வேலைக்கு செல்லும் பெற்றோர்; 2 வயது சிறுவனை கொடூரமாக தாக்கும் பணிப்பெண் - வீடியோ
வேலைக்கு செல்வதால் வீட்டில் தனியாக இருக்கும் தங்கள் 2 வயது மகனை பார்த்துக்கொள்ள பெற்றோர் பணிப்பெண் ஒருவரை நியமித்துள்ளனர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ஜாபல்பூர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதி வேலைக்கு செல்வதால் வீட்டியில் உள்ள தங்கள் 2 வயது குழந்தையை கவனிப்பதில் சிக்கல் நிலவியுள்ளது.
இதனை தொடர்ந்து மாதம் 5 ஆயிரம் சம்பளத்தில் ராஜினி சவுதிரி என்ற பெண்ணை தங்கள் மகனை பார்த்துக்கொள்ள தம்பதி வேலைக்கு நியமித்துள்ளனர். பணிப்பெண் ராஜினிக்கு தங்கள் வீட்டிலேயே தம்பதி உணவும் வழங்கியுள்ளனர்.
இதனிடையே, தங்கள் மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கள் மகனை தம்பதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனையில் குழந்தைக்கு உடலில் உள்காயங்கங்கள் இப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைக்கு எவ்வாறு காயங்கள் ஏற்பட்டது என்பது குறித்து குழப்பமடைந்தனர்.
பின்னர், வீட்டியில் குழந்தையை பார்த்துக்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ள ராஜினி சவுதிரி இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தம்பதியர் சந்தேகமடைந்தனர்.
இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள அறையில் ரகசிய கேமராவை தம்பதி பொறுத்தியுள்ளனர். இதில் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.
தம்பதி வேலைக்கு சென்ற பின் வீட்டில் இருக்கும் பணிபெண் ராஜினி 2 வயது குழந்தையை சரமாரியாக தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது. சிறுவனின் தலையை பிடித்து இழுத்தும், கன்னம், முதுகு என உடல் முழுவதும் கடுமையாக தாக்கி ராஜினி கொடுமைபடுத்தியுள்ளார். இது அங்கு வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.
வீடியோ காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 வயது குழந்தையை கடுமையாக தாக்கிய பெண் பணியாளர் ராஜினியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.