பானிபூரி 'டூடில்' வெளியிட்டு கூகுள் அசத்தல்


பானிபூரி டூடில் வெளியிட்டு கூகுள் அசத்தல்
x

நாடு முழுவதும் பிரபலமான சிற்றுண்டியான பானிபூரியை ‘டூடில்’ வெளியிட்டு கூகுள் அசத்தியது.

இந்தூர்,

உலகின் பிரபல தேடுபொறி தள நிறுவனமான கூகுள் நேற்று இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. நாடு முழுவதும் பிரபலமான சிற்றுண்டியான 'பானி பூரி'யை கொண்டாடும் வகையில் ஒரு டூடில் ஓவியத்தை வெளியிட்டு அசத்தியது கூகுள்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு உணவகம், தலைமை செப், நேஹா ஷாவின் வழிகாட்டுதலில், 51 சுவைகளில் பானி பூரிகளை தயாரித்து ஒரு உலக சாதனையைப் படைத்தது. அதை நினைவூட்டி கொண்டாடும் வகையில்தான் நேற்று கூகுள் டூடில் ஓவியம் வெளியிட்டு உள்ளது.

1 More update

Next Story