'யோகா தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள்' பிரதமர் மோடி அழைப்பு


யோகா தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள்  பிரதமர் மோடி அழைப்பு
x

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி,

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான யோகா தினம் அடுத்த மாதம் வரும் நிலையில், அதை உற்சாகமாக கொண்டாடுமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று அவர் ஆற்றிய 'மனிதன் குரல்' நிகழ்ச்சியில் இது குறித்து அவர் கூறுகையில், 'ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. மனித நேயத்துக்கான யோகா என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்தார்.


Related Tags :
Next Story