ஓசூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மாநிலக்களவையில் தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி வி.கே.சிங் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவில் வேறு விமான நிலையங்கள் அமைக்க கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் ஓசூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் நெய்வேலி, வேலூர் ஆகிய பகுதிகளில் விமான நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க இந்திய விமானப்படை நிலம் வழங்க உள்ளது. ராமநாதபுரத்திலும் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story