அனைத்து சிறைச்சாலைகளிலும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்; மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

அனைத்து சிறைச்சாலைகளிலும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்; மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
x

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கலை நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கலை நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் சுதந்திர தின நிகழ்வுகள் நடத்த அனுமதியளித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான உத்தரவை தலைமைச் செயலாளர்கள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறைத்துறை இயக்குநர் ஜெனரல்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களுக்கு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள கைதிகளை வைத்து நிகழ்வுகளை நடத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறைகளில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் தேச பக்தி பாடல்கள், நடனம், ரங்கோலி, சுவர் கலை மற்றும் நாடகம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள், யோகா, மறுவாழ்வு வாழ்க்கை முறை உள்ளிட்டவை அடங்கும்.

Next Story