சமையல் எரிவாயு விலை 10 சதவீதம் குறைகிறது..!! - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

கோப்புப்படம்
கியாஸ் விலை கொள்கையில் மாற்றம் காரணமாக சமையல் எரிவாயு விலை 10 சதவீதம் குறைகிறது. இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இதில் இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) விலை நிர்ணயம் மற்றும் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு (பி.என்.ஜி.) விலையை குறைக்க உதவும் உச்சவரம்பு விலை நிர்ணயித்தலில் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் சி.என்.ஜி. விலை 10 சதவீதம் வரை குறைகிறது. சர்வதேச சந்தை நிலவரப்படி இந்தியாவில் இந்த சி.என்.ஜி. மற்றும் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் கியாஸ் விலை கடந்த ஆகஸ்டு வரையிலான ஓராண்டில் மட்டும் 80 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான விண்வெளி கொள்கைக்கும் மந்திரிசபையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story






