ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உடன் சந்திப்பு


ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக் மத்திய மந்திரி அஸ்வினி  வைஷ்ணவ் உடன் சந்திப்பு
x

ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவை இன்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் நேற்று திறக்கப்பட்டது. இதனால் இந்தியா வருகை தந்த ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி( சி இ ஓ )டிம் குக் திறப்பு விழாவில் பங்கேற்றார்

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் மத்திய ரெயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள டுவிட்டர்'பதிவில் ,

ஆப்பிள் நிறுவன தலைமைசெயல் அதிகாரி டிம் குக்கை சந்தித்தேன் . உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, , திறன், நிலைப்புத்தன்மை மற்றும் குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் ஆப்பிள் நிறுவன ஈடுபாட்டை ஆழமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் மோடி உடன் சந்தித்து பேசினார்


Next Story