திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தங்கத்தில் அபிஷேக சங்கு, சக்கரம் வழங்கிய இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர்..!


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தங்கத்தில் அபிஷேக சங்கு, சக்கரம் வழங்கிய இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர்..!
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி தங்கத்தில் அபிஷேக சங்கு, சக்கரம் தானமாக வழங்கியுள்ளார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகிய இருவரும் தங்கத்தால் ஆன அபிஷேக சங்கு மற்றும் ஆமை போல வடிவமைக்கப்பட்ட சக்கரம் ஒன்றை தானமாக வழங்கியுள்ளனர்.

முன்னதாக இருவரும் ஏழுமலையானை தரிசனம் செய்த நிலையில், அவர்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க பிரசாதம் வழங்கப்பட்டது. அபிஷேக சங்கு மற்றும் சக்கரத்தின் எடை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, "கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்திருப்பதாகவும், அதற்கு விடை கிடையாது" என்றும் சுதா மூர்த்தி பதிலளித்தார்.

1 More update

Next Story