கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மங்களூரு:-
கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் அதாவது இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் 16-ந்தேதி (இன்று), 17-ந்தேதி (நாளை) ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மங்களூரு, உடுப்பி, பட்கல், கார்வார் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.