விரைவில் தேசிய கட்சி தொடங்குவேன் சந்திரசேகர ராவ் அறிவிப்பு
விைரவில் தேசிய கட்சி தொடங்கப்படும். அதற்கான கொள்கைகள் வகுக்கும் பணியும் நடந்து வருகிறது.
ஐதராபாத்,
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில், விரைவில் தேசிய கட்சி தொடங்கப் போவதாக நேற்று அவர் அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பு செய்ததுபோல், அறிவுஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், பல்துறை நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினோம். அதில், தேசிய அளவில் மாற்று கட்சி தொடங்குவது குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டது.
விைரவில் தேசிய கட்சி தொடங்கப்படும். அதற்கான கொள்கைகள் வகுக்கும் பணியும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story