சந்திரயான் 3 - சுற்றுவட்டப்பாதை உயரம் மேலும் குறைப்பு


சந்திரயான் 3 - சுற்றுவட்டப்பாதை உயரம் மேலும் குறைப்பு
x
தினத்தந்தி 16 Aug 2023 9:39 AM IST (Updated: 16 Aug 2023 2:11 PM IST)
t-max-icont-min-icon

சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'சந்திரயான்-3' என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது.

வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அதன் சுற்றுப்பாதை தொலைவு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஏற்கனவே 3 முறை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 153 * 163 கி.மீ. ஆக நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் நாளை பிரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.


Next Story