நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் -3
விக்ரம் லேண்டரில் உள்ள "நிலவின் மேற்பரப்பை பரிசோதிக்கும் கருவி" அனுப்பிய முதல்நிலை "கிராப்"-ஐ இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது .
புதுடெல்லி,
சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில்,
நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் என்றும் விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், விக்ரம் லேண்டரில் உள்ள நிலவின் மேற்பரப்பை பரிசோதிக்கும் கருவி அனுப்பிய முதல்நிலை "கிராப்"-ஐ இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் 10 சென் டி மீட்டர் வரை துளைத்து ஆய்வு செய்யும் திறன் உடையது விக்ரம் லேண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story