நாடு முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்.. மின்சார வாகனங்களுக்கு இந்தியன் ரெயில்வே சூப்பர் பிளான்...!


நாடு முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்.. மின்சார வாகனங்களுக்கு இந்தியன் ரெயில்வே சூப்பர் பிளான்...!
x

இந்திய ரெயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய ரெயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். ரெயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 46 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க இந்திய ரெயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் (EV)மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இதற்காக ரெயில்வே அலுவலகங்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களை கண்டறிந்து, அங்கு மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதிகளை நிறுவுவதற்காக ரெயில்வே திட்டமிட்டுள்து. இவ்வாறு அமைக்கப்படும் சார்ஜிங் பாயின்ட்களை பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவும் ரெயில்வே முடிவு செய்துள்ளது.


Next Story