சி.ஆர்.பி.எப். முதல் பெண் ஐ.ஜி.யாக சாரு சின்கா பதவியேற்பு


சி.ஆர்.பி.எப். முதல் பெண் ஐ.ஜி.யாக சாரு சின்கா பதவியேற்பு
x

தென் பிராந்திய சி.ஆர்.பி.எப். முதல் பெண் ஐ.ஜி.யாக சாரு சின்கா பதவியேற்றுக் கொண்டார்.

ஐதராபாத்,

ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கியது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்.) தென் பிராந்தியம். இந்த பிராந்தியத்தின் முதல் பெண் ஐ.ஜி.யாக சாரு சின்கா பதவியேற்றுள்ளார்.

ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப். தென் பிராந்திய தலைமையகத்தில் அவர் பதவியேற்றுக்கொண்டார். தென் பிராந்திய ஐ.ஜி.யாக இருந்த மகேஷ் சந்திர லத்தாவிடம் இருந்து சாரு சின்கா பொறுப்பேற்றார். சி.ஆர்.பி.எப். ஜம்மு பிராந்தியத்துக்கு மகேஷ் சந்திர லத்தா மாற்றப்பட்டுள்ளார்.

தெலுங்கானா கேடர் 1996-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான சாரு சின்கா, இதற்கு முன்பு ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் ஐ.ஜி.யாக பணியாற்றியுள்ளார்.

பீகாரில் நக்சலைட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர், தெலுங்கானா, ஆந்திராவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக குந்தன்பாக்கில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த சின்கா, பின்னர் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.


Next Story