இன்று முதல் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஆரம்பம்: 10, 12-ம் வகுப்பு தேர்வு அறைகளில் 'சாட்-ஜி.பி.டி.' செயலிக்கு தடை


இன்று முதல் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஆரம்பம்: 10, 12-ம் வகுப்பு தேர்வு அறைகளில் சாட்-ஜி.பி.டி. செயலிக்கு தடை
x

கோப்புப்படம்

இன்று முதல் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஆரம்பமாக உள்ளநிலையில் 10, 12-ம் வகுப்பு தேர்வு அறைகளில் ‘சாட்-ஜி.பி.டி.' செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் புதன்கிழமை (இன்று) தொடங்குகிறது. இதையொட்டி தேர்வு அறைகளில் செல்போன், 'சாட்-ஜி.பி.டி.' செயற்கை அறிவு நுட்ப செயலி மற்றும் பிற எலக்ட்ரானிக் கருவிகள் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.

'சாட்-ஜி.பி.டி.' நுட்பம் பயன்படுத்தப்பட்டால் நியாயமற்ற முறைகளுக்கு வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

'சாட்-ஜி.பி.டி.' என்பது கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கணினி தொழில்நுட்பமாகும். நவீன கணினி மொழியான இது கணினி மற்றும் இன்டர்நெட் இணைப்புகளில் உள்ள தரவுகளைக் கொண்டு நமது தேடலுக்கு ஏற்ப புதிய கட்டுரைகள், உரையாடல்களை உருவாக்கித் தரக்கூடியது. மனித உதவியாளர் போன்ற பணியை இது எளிதாக செய்துவிடும் என்பதால் மாணவர்கள் இதை தவறாக பயன்படுத்தக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது. உரையாடல் மற்றும் கட்டுரையில் அடுத்து என்ன வரும் என்பதை முன்கூட்டியே யூகித்து காண்பிக்கும் ஆற்றல் கொண்டது 'சாட்-ஜி.பி.டி.' செயலி. எனவே அதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story