கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை


கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Jun 2023 2:57 AM IST (Updated: 1 Jun 2023 12:44 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை.

கொப்பல்:

கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா மலகிட்டி கிராமத்தை சேர்ந்தவர் பீராசாப்(வயது 33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இதற்கிடையே அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாரதா என்ற 30 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுகுறித்து பீராசாப்பின் மனைவிக்கு தெரியவந்தது. உடனே அவர் கள்ளக்காதலை கைவிடுமாறு கணவரை வலியுறுத்தினார். ஆனால் அவர் அதைகண்டு கொள்ளவில்லை. இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, கள்ளக்காதல் ஜோடி இருவரும் பிரிந்து வாழுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கிராமத்தினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து பீராசாப், சாரதா ஆகியோர் அருகில் உள்ள விளைநிலத்திற்கு சென்றனர். அவர்கள் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஹனமசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story