சமையல்கலை நிபுணர்களிடையே டெல்லியில் பிரியாணி சாம்பியன் லீக் போட்டி - 1½ மணி நேரம் நேரடியாக சமைத்து அசத்தல்


சமையல்கலை நிபுணர்களிடையே டெல்லியில் பிரியாணி சாம்பியன் லீக் போட்டி - 1½ மணி நேரம் நேரடியாக சமைத்து அசத்தல்
x

டெல்லியில், எல்.டி.புட்ஸ் என்ற நிறுவனம், சிறப்பாக பிரியாணி சமைப்பது தொடர்பாக சமையல் கலைஞர்களிடையே ‘தாவத் பிரியாணி சாம்பியன் லீக்’ என்ற பந்தயத்தை அறிவித்தது.

புதுடெல்லி,

டெல்லியில், எல்.டி.புட்ஸ் என்ற நிறுவனம், சிறப்பாக பிரியாணி சமைப்பது தொடர்பாக சமையல் கலைஞர்களிடையே 'தாவத் பிரியாணி சாம்பியன் லீக்' என்ற பந்தயத்தை அறிவித்தது. போட்டியில் பங்கேற்க சமையல் குறிப்பு அடங்கிய வீடியோவை சமர்ப்பிக்க வேண்டும்.

சுமார் 200 பேர், வீடியோ அனுப்பி போட்டியில் பங்கேற்றனர். பல சுற்றுக்கு பிறகு, அவர்களில் லக்கன் சிங், லட்சுமண் சிங், முகமது ஷான், மொய்னுதின், ராபே அசாம் ஆகிய 5 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், டெல்லி நட்சத்திர ஓட்டல்களில் சமையல் கலைஞர்களாக இருப்பவர்கள்.

ஒரு நட்சத்திர ஓட்டலில் இறுதிச்சுற்று பந்தயம் நடந்தது. பிரபல சமையல்கலை நிபுணர் மஞ்சித் கில், உணவு விமர்சகர் வீர் சங்வி உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்தனர். 1½ மணி நேரத்தில் நேரடியாக சமைத்துக் காட்ட வேண்டும் என்பதன் அடிப்படையில், 5 பேரும் தங்கள் திறமையை காண்பித்தனர்.

அவர்களில், மார்க்கெட் பிளேஸ் உணவகத்தை சேர்ந்த சமையல் கலைஞர் லக்கன்சிங், பிரியாணி சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பரிசுக்கோப்பையும், ரூ.51 ஆயிரம் ரொக்கப்பரிசும், சமையல் கலைஞருக்கான கோட்டும் வழங்கப்பட்டன.


Next Story