பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நக்சலைட் அச்சுறுத்தலில் இருந்து சத்தீஷ்கர் விடுவிக்கப்படும் - அமித்ஷா உறுதி


பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நக்சலைட் அச்சுறுத்தலில் இருந்து சத்தீஷ்கர் விடுவிக்கப்படும் - அமித்ஷா உறுதி
x
தினத்தந்தி 20 Oct 2023 2:48 AM GMT (Updated: 20 Oct 2023 5:13 AM GMT)

சத்தீஷ்கரில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், நக்சலைட் அச்சுறுத்தலில் இருந்து அம்மாநிலம் விடுவிக்கப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

பஸ்தார் பிராந்தியம் ஒரு காலத்தில் நக்சல் பயங்கரவாதத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போதும் சில இடங்களில் நக்சல் ஆதிக்கம் இருக்கிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், நக்சல் அச்சுறுத்தலில் இருந்து சத்தீஷ்கர் முற்றிலும் விடுவிக்கப்படும்.

மோடி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில், நக்சலைட் வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளன. நக்சலைட் வன்முறையால் ஏற்படும் மரணங்கள், 70 சதவீதம் குறைந்துள்ளன. பொதுமக்கள் உயிரிழப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. நக்சல் பாதிப்பு நிறைந்த மாவட்டங்கள் எண்ணிக்கை 62 சதவீதம் குறைந்துள்ளது. சத்தீஷ்கர் மக்களுக்கு 2 வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒருபக்கம், நக்சல் பயங்கரவாதத்தை ஊக்குவித்த காங்கிரஸ். மற்றொரு புறம், நக்சல் பயங்கரவாதத்தை ஒழித்த பா.ஜனதா.

சத்தீஷ்கர் மக்கள் தீபாவளியை 3 தடவை கொண்டாடுவார்கள். பண்டிகை நாளில் ஒருதடவை கொண்டாடுவார்கள். டிசம்பர் 3-ந் தேதி, பா.ஜனதா ஆட்சிக்கு வரும்போது 2-வது தடவை கொண்டாடுவார்கள். ஜனவரி மாதம், ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் முடிவடையும்போது 3-வது தடவையாக கொண்டாட்டம் நடக்கும். ஏனென்றால், ராமரின் தாய்வழி தாத்தா-பாட்டியின் மண், சத்தீஷ்கர் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story