எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்து.. போலீஸ்காரர் பலி: ரெயில் பயணி காயம்


எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்து.. போலீஸ்காரர் பலி: ரெயில் பயணி காயம்
x
தினத்தந்தி 10 Feb 2024 12:55 PM IST (Updated: 10 Feb 2024 1:21 PM IST)
t-max-icont-min-icon

காயமடைந்த இருவரையும் மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை ரெயில்வே பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தினேஷ் சந்திரா (வயது 30) என்ற ரெயில்வே போலீஸ் ஒரு ரெயிலின் எஸ்-2 கோச்சில் இருந்து வெளியேறும்போது, எதிர்பாரா விதமாக அவரின் சர்வீஸ் துப்பாக்கி சூட்டது. இதில் தினேஷின் மார்பில் தோட்டா பாய்ந்தது. மேலும் அந்த கோச்சில் தூங்கிக்கொண்டிருந்த முகமது டேனிஷ் என்ற பயணியின் வயிற்றிலும் தோட்டா பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது.

ரெயிலில் இருந்த மற்ற பயணிகள் துப்பாக்கி சத்தம் கேட்டு பார்த்தபோது, இருவர் ரத்த வெள்ளத்தில் காயத்துடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே போலீஸ் தினேஷ் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story