ஜனாதிபதி தேர்தல்: யஷ்வந்த் சின்காவுக்கு சந்திரசேகர் ராவ் ஆதரவு


ஜனாதிபதி தேர்தல்: யஷ்வந்த் சின்காவுக்கு சந்திரசேகர் ராவ் ஆதரவு
x
தினத்தந்தி 27 Jun 2022 10:43 AM IST (Updated: 27 Jun 2022 12:01 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றார்.

ஐதராபாத்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றார்.

திரவுபதி முர்மு ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதனிடையே யஷ்வந்த் சின்காவுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story