சிக்கமகளூரு அரசு மருத்துவக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும்; சி.டி.ரவி. எம்.எல்.ஏ. தகவல்
சிக்கமகளூரு அரசு மருத்துவக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும் என சி.டி.ரவி. எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிக்கமகளூரு அருகே கதிரிமிதிரி என்னும் கிராமத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் பணிகள் முடிந்துவிடும்.
ஆனால் தேசிய மருத்துவ கல்லூரி ஆய்வுத்துறை நடப்பாண்டு முதலே மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வகுப்பு தொடங்க உத்தரவிட்டு்ள்ளது. அதன்படி முதலாமாண்டில் 150 மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருவதால் பென்சன் மொகல்லா பகுதியில் உள்ள முக்தி விஷ்வ வித்யாலயாவில் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தப்படும். அடுத்தாண்டு முதல் அரசு மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும். எனவே, சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.