கர்நாடகா: 'போக்சோ' வழக்கில் கைதானவர்களால் நிரம்பி வழியும் சிக்கமகளூரு சிறை


கர்நாடகா: போக்சோ வழக்கில் கைதானவர்களால் நிரம்பி வழியும் சிக்கமகளூரு சிறை
x

கோப்புப்படம்

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு சிறை ‘போக்சோ’ வழக்கில் கைதானவர்களால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிக்கமகளூரு,

குழந்தைகள், சிறுமிகள், மைனர் பெண்களை பலாத்காரம் செய்பவர்கள், அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்கள் மீது 'போக்சோ' (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

இந்த நிலையில் கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டம் என்றழைக்கப்படும் சிக்கமகளூருவில் குழந்தைகள், மைனர்பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமானோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களால் சிக்கமகளூரு சிறை நிரம்பி வழிகிறது.

சிக்கமகளூரு சிறையில் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய 280 பேர் விசாரணை கைதிகளாவும், தண்டனை கைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தான். அதாவது சிக்கமகளூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 280 கைதிகளில், 160 பேர் போக்சோ வழக்கில் கைதானவர்கள் ஆவர். அவர்களில் 53 பேர் 20 முதல் 30 வயது உடையவர்களாக உள்ளனர். சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 226 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளது.


Next Story