சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது


சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது
x

பெங்களூருவில் சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா பகுதியை சேர்ந்த சிறுமி கோவிந்தராஜநகர் பகுதியில் நின்று கொண்டு இருந்தாா். அந்த சிறுமியை, கோவிந்தராஜநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுமியை கே.பி.அக்ரஹாரா பகுதியில் வைத்து போலீஸ்காரர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கே.பி.அக்ரஹாரா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ்காரரை கைது செய்துள்ளனர். சிறுமிக்கும், போலீஸ்காரருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. போலீஸ்காரரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story