நேபாள வான் பகுதியில் தீப்பிடித்து எரிந்த சீன ராக்கெட்


நேபாள வான் பகுதியில் தீப்பிடித்து எரிந்த சீன ராக்கெட்
x
தினத்தந்தி 16 March 2023 11:38 PM IST (Updated: 17 March 2023 10:07 AM IST)
t-max-icont-min-icon

உளவு செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட சீன ராக்கெட், நேபாள வான் பகுதியில் தீ பிடித்து எரிந்தது.

காத்மாண்டு [நேபாளம்],

உளவு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட சீன ராக்கெட் நேபாளத்தின் வானத்தில் எரிந்ததாக அமெரிக்க கடற்படை நிறுவனம் (யுஎஸ்என்ஐ) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானியல் இயற்பியலாளர் ஜொனாதன் மெக்டோவல் கூறுகையில், "மத்திய சீனாவில் இருந்து செலுத்தப்பட்ட சாங் செங் 2டி லாங் மார்ச் என்ற அந்த ராக்கெட், உளவு செயற்கைக் கோள்களை விடுவித்த பின்னர் சுமார் 200 நாட்கள் விண்வெளியில் இருந்த பிறகு, கடந்த சனிக்கிழமையன்று வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. அப்போது நேபாள வான் பகுதிக்குள் நுழைந்தபோது, ராக்கெட் தீப்பற்றியது" என்று அவர் தெரிவித்தார்.

இதேபோன்ற சம்பவம் கடந்த வாரம் அமெரிக்காவின் டெக்சாசில் நடந்தது. மத்திய சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட ராக்கெட் ஒன்று, தென் சீனக் கடலை கண்காணிப்பதற்கான மூன்று உளவு செயற்கைக் கோள்களை விடுவித்தபின், கடந்த 8ம் தேதி டெக்சாஸ் மாநில வான் பகுதியில் தீப்பற்றி எரிந்தது.

1 More update

Next Story