நவம்பரில் நடைபெறும் பெங்களூரு டிசைன் திருவிழாவுக்கான 'சின்னம்'; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார்


நவம்பரில் நடைபெறும் பெங்களூரு டிசைன் திருவிழாவுக்கான சின்னம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார்
x

வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள பெங்களூரு டிசைன் திருவிழாவுக்கான சின்னத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார்.

பெங்களூரு:

வடிவமைப்பாளர்கள்

பெங்களூரு டிசைன் திருவிழா வருகிற நவம்பர் 11-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 12-ந் தேதி வரை ஒரு மாதம் நடக்க உள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கான சின்னத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று வெளியிட்டார். அதன் பிறகு உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு டிசைன் திருவிழா ஒரு மாதம் நடக்க இருக்கிறது. இதில் உலக அளவில் பிரபலமான வடிவமைப்பாளர்கள் மற்றும் சிற்பிகள் கலந்து கொள்கிறார்கள். நவீன உலகில் மக்களை ஈர்க்கும் வகையிலான வடிவமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இதன் மூலம் பெங்களூரு வடிவமைப்பு கற்றல், வளர்ச்சி மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதலில் முக்கிய நகரமாக மாறும்.

எதிர்காலத்தின் தேவை

மேலும் இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கலை மற்றும் வடிவமைப்பு அடிப்படையிலான பொருளாதாரம் எதிர்காலத்தின் தேவையாக உள்ளது. பெங்களூரு இந்த துறையின் தலைநகரமாக வர வேண்டும் என்பது அரசின் விருப்பம் ஆகும். பெங்களூரு இளைஞர்களுக்கு வடிவமைப்பு துறையில் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க அரசு தயாராக உள்ளது. இந்த பெங்களூரு டிசைன் திருவிழாவுக்கு சர்வதேச அளவில் உள்ள அமைப்புகள் உதவிகள் செய்து வருகின்றன.

இவ்வாறு அஸ்வத்நாராயண் கூறினார்.


Next Story