பார்வையில்லாத மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்கு கோர்ட்டில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தலைமை நீதிபதி ஆலோசனை!


பார்வையில்லாத மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்கு கோர்ட்டில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தலைமை நீதிபதி ஆலோசனை!
x

பார்வையற்ற வழக்கறிஞர்கள் பணிபுரிவதில் உள்ள சிரமங்களை மூத்த வழக்கறிஞர் ருங்டாவிடம் தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டார்.

புதுடெல்லி,

பார்வையற்ற வழக்கறிஞர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில்கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். போதிய வசதிகள் இல்லாததால் அவர்கள் தொழிலை செய்ய முடியவில்லை என சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று மூத்த வழக்கறிஞர் எஸ்.கே.ருங்டாவிடம், பார்வையற்ற வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றங்களை அணுகுவதற்கு தொடர்பாக முக்கிய ஆலோசனைகளைப் பெற்றார்.

பார்வையற்ற வழக்கறிஞர்கள் தினசரி நீதிமன்றங்களில் பணிபுரிவதில் உள்ள சிரமங்களை தெரிவிக்குமாறு எஸ்.கே.ருங்டாவிடம் தலைமை நீதிபதி சந்திரசூட் சமீபத்தில் கேட்டுக் கொண்டார். எனவே அவர் இந்த விஷயத்தை ஆய்வு செய்து தலைமை நீதிபதிக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்தப் பரிந்துரைகளை வழங்கிய மூத்த வழக்கறிஞர் எஸ்.கே.ருங்டா பார்வை இழந்த மாற்றுத்திறனாளி ஆவார். ஆனால், அவர் வழக்கறிஞரானது மட்டுமின்றி பல வழக்குகளில் வாதிட்டார். இந்நிலையில், தலைமை நீதிபதி அவரிடம் ஆலோசனை கேட்டார்.

தலைமை நீதிபதிக்கு ஆலோசனை வழங்க கோர்ட்டில் ஆஜரான எஸ்.கே.ருங்டாவிடம், நீதிபதி சந்திரசூட் ஒரு கேள்வி கேட்டார். மற்ற வக்கீல்களைப் போல் நீதிமன்றத்தில் மற்ற வழக்குகளுக்கான ஆவணங்களை எப்படி சேகரிக்கிறீர்கள். அதற்கு அவர் பென்டிரைவில் உள்ள தகவல்களை இணையம் மூலம் பயன்படுத்தி பிரெய்லி எழுத்தாக மாற்றி வருகிறேன் என்று பதிலளித்தார்.

இதை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி, இ-கமிட்டியை அமைப்பதாகவும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறினார். இந்நிலையில், தலைமை நீதிபதிக்கு ருங்டா ஆலோசனைகளை வழங்கினார். அவர் கூறியதாவது:-

நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் கணினிகளில் உள்ள மென்பொருள் பார்வையற்ற வழக்கறிஞர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பார்வைக் குறைபாடுள்ள வழக்கறிஞர்கள் இந்தத் தகவல்களை எளிதாக பிரெய்லியாக மாற்ற முடியும். மென்பொருளில் தகவல்களை குரல் உள்ளீடாக மாற்றும் வாய்ப்பு இருந்தாலும், நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியாது.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, தேசிய தகவல் மையத்தின் தலைமை விஞ்ஞானி உங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பார்வையற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை அணுகுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


Next Story