குறைந்த விலைக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.2¼ லட்சம் மோசடி


குறைந்த விலைக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
x

குறைந்த விலைக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த வாலிபர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கபட்டு உள்ளது.

சிக்கமகளூரு;


இன்ஸ்டாகிராம் நண்பர்கள்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா அங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் இன்சரா (வயது 26). பட்டதாரி ஆவார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறி கொண்டு நண்பர்களாக பேசி பழகி வந்தனர்.

இந்த நிலையில் வெளிநாட்டு நண்பர், இன்சராவிடம் இங்கு குறைந்த விலைக்கு பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் கிடைக்கும். மேலும் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை வெறும் ரூ.2 லட்சத்திற்கு வாங்கலாம் என ஆசைவாா்த்தை கூறியுள்ளார். மேலும் தனது வங்கி கணக்கின் நம்பரையும் அனுப்பி வைத்துள்ளார்.

பல தவணைகளாக...

இதை நம்பிய இன்சரா, தனது வெளிநாட்டு நண்பர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.2¼ லட்சம் வரை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் எந்த பொருட்களும் இன்சராவிற்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர், தனது நண்பரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

போலீசில் புகார்

அப்போது தான் வெளிநாட்டு நபர் தன்னிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக இன்சரா இதுகுறித்து சிக்கமகளூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தாா். அந்த புகாரின் போில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story