பி.யூ.கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஒருவர் படுகொலை


பி.யூ.கல்லூரி மாணவர்கள் இடையே  மோதல் ஒருவர் படுகொலை
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:45 PM GMT)

பி.யூ.கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மைசூரு

பி.யூ,கல்லூரி மாணவர்கள்

மைசூரு (மாவட்டம்) டவுன் ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது17). அதேப்பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (17). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். அபிஷேக், கிருஷ்ணா ஆகிய 2 பேரும் அதேப்பகுதியில் உள்ள பி.யூ.கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

அவர்கள் 2 பேரும் கல்லூரிக்கு சேர்ந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை 2 பேரும் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் கொண்டாடினர்.

பின்னர் மறுநாள் (நேற்றுமுன்தினம்) அபிஷேக், கிருஷ்ணா ஆகிய 2 பேரும் கல்லூரிக்கு சென்றனர். அவர்கள் 2 பேரும் வகுப்பறையில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.

வகுப்பறைக்கு ஆசிரியர்கள் வரவில்லை. அப்போது திடீரென இருக்கையில் அமர்வது தொடர்பாக அபிஷேக், கிருஷ்ணாவுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.

கன்னத்தில் தாக்கினார்

இதில் கோபமடைந்த அபிஷேக், கிருஷ்ணா கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில், அவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான். இதையடுத்து கிருஷ்ணாவை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான். இந்த ெகாலை சம்பவம் குறித்து வித்யாரண்யபுரா போலீசார் வழக்கு செய்து அபிஷேக்கை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


Next Story