பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைப்புக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்பு


பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைப்புக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்பு
x

பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைப்புக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்பு தெரிவித்துள்ளார்

பெங்களூரு: பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது இதன் மூலம் பெங்களூரு உட்பட கர்நாடகத்தில் பெட்ரோல் டீசல் விலை பெருமளவு குறைந்துள்ளது பெங்களூருவில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.09-க்கும், டீசல் ரூ.94.77-க்கு விற்கப்பட்டது. மத்திய அரசு கலால் வரியை குறைத்திருப்பதன் மூலம் பெட்ரோல் விலை ரூ.9.50 குறைக்கப்பட்டுள்ளதால் பெங்களூருவில் பெட்ரோல் விலை ரூ.101.50 ஆகவும், இதுபோல் டீசல் விலை ரூ.7 குறைக்கப்பட்டுள்ளதால் ரூ.87.79 ஆக குறைந்துள்ளது.


இந்த நிலையில் பெட்ரோல். டீசல் மீதான கலால் வரியை குறைத்து இருப்பதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கலால் வரியை குறைத்து இருப்பதற்காக பிரதமர் மோடிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். அதுபோல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் இணைப்பு பெற்று இருப்பவர்களுக்கு ரூ.200 மானியம் வழங்குவதையும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்றுள்ளார்.


Next Story