டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி


டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 15 March 2023 10:45 AM IST (Updated: 15 March 2023 10:47 AM IST)
t-max-icont-min-icon

மூடபித்ரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்தாள்.

மங்களூரு-

மூடபித்ரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்தாள்.

கல்லூரி மாணவி

தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா ஜோதி நகரை சேர்ந்தவர் மொய்தீன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்லத். இவர்களுடைய மகள் மிஸ்ரியா (வயது 17). இவர் மூடபித்ரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் மிஸ்ரியா கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து மிஸ்ரியாவை ரம்லத் சிகிச்சைக்காக மூடபித்ரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ேசர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மிஸ்ரியாவுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியை டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் வைத்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

டெங்கு காய்ச்சலுக்கு பலி

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மிஸ்ரியா பரிதாபமாக இறந்தார். இதற்கடையே மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்த மொய்தீன், துபாயில் இருந்து திரும்பி வந்தார். இதையடுத்து மிஸ்ரியாவின் உடல் அவரது பெற்றேரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

இதுகுறித்து மூடபித்ரி தாலுகா சுகாதார அலுவலர் டாக்டர் சுஜய் பண்டாரி கூறுகையில், "டெங்கு, மலேரியா நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டால், உடனடியாக சுகாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் யாருக்கு ஏற்பட்டாலும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றார்.

முன்னெச்சரிக்கை

இந்த நிலையில் மூடபித்ரி தாலுகாவில் பகுதியில் யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட உள்ளனர். மேலும் அப்பகுதி முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூடபித்ரி தாலுகாவில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலியான சம்பவம் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.



Next Story