கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கிய பேராசிரியர்


கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கிய பேராசிரியர்
x

கல்லூரி மாணவியை பேராசிரியர் ஒருவர் கர்ப்பிணியாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

ஹாவேரி: ஹாவேரி மாவட்டம் சிக்காம்வி தாலுகா பங்காபுரா கிராமத்தில் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 20 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கும், அந்த கல்லூரியின் பேராசிரியர் லிங்கப்பா கலகோடி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு அந்த மாணவியை தனியாக அழைத்து சென்று லிங்கப்பா கற்பழித்து உள்ளதாக தெரிகிறது.


இதுகுறித்து வெளியே கூற கூடாது என்றும் மாணவியை அவர் மிரட்டி உள்ளார். இதனால் மாணவி சம்பவம் பற்றி வெளியே கூறவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி அடிக்கடி மாணவியை, லிங்கப்பா கற்பழித்து வந்ததாக தெரிகிறது. தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் லிங்கப்பா மீது சவனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story