சாமுண்டீஸ்வரி தொகுதி போல் வருணாவில் சித்தராமையாவை வீழ்த்த உள்ஒப்பந்தம்; யதீந்திரா குற்றச்சாட்டு


சாமுண்டீஸ்வரி தொகுதி போல் வருணாவில் சித்தராமையாவை வீழ்த்த உள்ஒப்பந்தம்; யதீந்திரா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாமுண்டீஸ்வரி தொகுதி போல் வருணாவில் சித்தராமையாவை வீழ்த்த உள்ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக யதீந்திரா குற்றச்சாட்டு உள்ளார்.

மைசூரு:

மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் வி.சோமண்ணா களமிறக்கப்பட்டுள்ளார். சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுக்கவே அவரை நிறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சித்தராமையாவும், சோமண்ணாவும் குரு-சிஷ்யனாக இருந்தனர். தற்போது பா.ஜனதா குருவுக்கு எதிராக சிஷ்யனை மோதவிட்டுள்ளது. இதுகுறித்து சித்தராமையாவின் மகனும், வருணா தொகுதி எம்.எல்.ஏ.வுமான யதீந்திரா கூறுகையில், பா.ஜனதா மேலிடத்தின் அழுத்தத்தால் வி.சோமண்ணா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் எங்களை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் கவலை இல்லை. தயக்கத்துடன் தான் சோமண்ணா இங்கே களமிறங்குகிறார். அனைவரும் சித்தராமையாவை வீழ்த்த குறி வைக்கிறார்கள். பா.ஜனதாவும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் அவரை வீழ்த்த உள்ஒப்பந்தம் செய்ய உள்ளது. ஒழுக்கமற்ற முறையில் சித்தராமையாவை தோற்கடிக்க முயற்சி நடக்கிறது. கடந்த முறை இதே போல் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்கடித்தனர். எனவே இந்த முைற அவ்வாறு நடக்க விடமாட்டோம் என்றார்.


Next Story