இது தான் தேசிய கீதமா..? ராகுல் காந்தியின் நிகழ்ச்சியில் சலசலப்பு: "காமெடி சர்க்கஸ்" என பாஜக வெளியிட்ட வீடியோ!


இது தான் தேசிய கீதமா..? ராகுல் காந்தியின் நிகழ்ச்சியில் சலசலப்பு: காமெடி சர்க்கஸ் என பாஜக வெளியிட்ட வீடியோ!
x

தேசிய கீதத்துக்கு பதில், வேறொரு பாடல் ஒலிபரப்பானது.உடனே, பாடலை நிறுத்துமாறு ராகுல் காந்தி சைகை காட்டினார்.

மும்பை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை (பாரத் ஜடோ) நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக கடந்த 7-ந் தேதி மராட்டியத்தை வந்தடைந்தது.

ராகுல்காந்தியின் நாடு தழுவிய நடைபயணம் நேற்று 70-வது நாளை எட்டியது. மராட்டியத்தில் அவர் 10-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டார். வாசிம் மாவட்டம் ஜாம்ருன் பாட்டா என்ற இடத்தில் இருந்து காலை 6 மணிக்கு நடைபயணம் தொடங்கியது. அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.ராகுல்காந்தி தனது உரையை முடித்ததும், தேசிய கீதம் இசைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது. ராகுல் காந்தியும் மைக்கில் இதனை அறிவித்தார். அதன்பின், அனைவரும் அமைதியாக நின்றதும், சில நொடிகள் இசை ஒலித்தது.

ஆனால் தேசிய கீதத்துக்கு பதில், வேறொரு பாடல் ஒலிபரப்பானது. சில நொடிகளிலேயே இதை உணர்ந்துகொண்ட ராகுல் காந்தி, உடனே, அங்கிருந்த தலைவர்களுக்கு சைகை காட்டினார். பாடலை நிறுத்துமாறு கையசைத்தார். உடனே இசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது.

இந்த சம்பவத்தின் வீடியோவை மராட்டிய பாஜக தலைவர் நிதேஷ் ரானே டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், 'பப்புவின் நகைச்சுவை சர்க்கஸ்' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் பல சமூக ஊடக பயனர்களிடமிருந்து விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த சர்ச்சைக்கு காங்கிரஸ் தரப்பில் இதுவரை பதில் அளிக்கவில்லை.

1 More update

Next Story