விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகம் : நிதின் கட்கரி


விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகம் : நிதின் கட்கரி
x

விரைவில் எலக்ட்ரிக் டிராக்டரை நான் அறிமுகப்படுத்துவேன்.இவ்வாறு நிதின் கட்கரி கூறினார் .

புனே,

மகாராஷ்ட்ராவின், புனே நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி கூறியதாவது ;

எத்தனால், மெத்தனால் போன்று எதிர்காலத்தில் மாற்று எரிபொருளாக மின்சாரம் இருக்கும். எனக்கு நினைவிருக்கிறது, 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் எலக்ட்ரிக் வாகனங்களைப் பற்றி பேசும்போது, ​​மக்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் இப்போது பாருங்கள், எலக்ட்ரிக் வாகன தேவை அதிகரித்ததுள்ளது . எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் காத்திருக்கின்றனர்:

மேலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எலக்ட்ரிக் கார், எலக்ட்ரிக் பேருந்து ஆகியவையும் வந்துவிட்டதை கூறிய அவர் விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர், டிரக் ஆகியவற்றை நான் அறிமுகப்படுத்துவேன்.இவ்வாறு நிதின் கட்கரி கூறினார் .


Next Story