லிங்காயத் முதல்-மந்திரி பற்றிய கருத்து


லிங்காயத் முதல்-மந்திரி பற்றிய கருத்து
x

லிங்காயத் முதல்-மந்திரி பற்றிய கருத்து கூறியதாக சித்தராமையா மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா சமீபத்தில் லிங்காயத் முதல்-மந்திரி ஒருவர் ஊழல் செய்து மாநிலத்தை சீரழித்துவிட்டார் என்று மறைமுகமாக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு லிங்காயத் சமுதாயத்தினரும், பா.ஜனதா தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், லிங்காயத் இளைஞர் மன்ற சட்ட பிரிவு தலைவர் பசவராஜ், சித்தராமையா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சித்தராமையா ஒட்டுமொத்த லிங்காயத் சமுதாயத்தையும் அவமதித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகாரை எந்த கட்சி சார்பிலோ அல்லது வற்புறுத்தலின் பேரிலோ கொடுக்கவில்லை என்றும் பசவராஜ் கூறியுள்ளார்.

இதற்கிடையே வீரசைவ-லிங்காயத் சமுதாய அமைப்பு சார்பில் சங்கர் ஷெட் என்பவர், லிங்காயத் முதல்-மந்திரி பற்றிய சித்தராமையா கருத்து தொடர்பாக மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து வீரசைவ-லிங்காயத் சமுதாய அமைப்பு கூறுகையில், லிங்காயத் முதல்-மந்திரி விவகாரத்தில் உடனே சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story