இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது - அமித் ஷா பேச்சு


இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது - அமித் ஷா பேச்சு
x

Image Courtesy : PTI 

விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை கட்டுக்குள் உள்ளதாக அமித் ஷா பேசினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் இந்தியாவில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அமித் ஷா பேசியதாவது :

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் விலைவாசி உயர்வு இந்தியாவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை, பாகிஸ்தான், பிற அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நிலைமையை நாம் காண்கிறோம். கொரோனா தொற்றுக்குப் பிறகும் பல நாடுகள் தங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை இன்னும் உணர்கின்றன. ஆனால் இந்தியாவில் விலை உயர்வு மற்றும் மந்தநிலை இருந்தாலும் அது கட்டுக்குள் உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியை விமர்சிப்பவர்கள் இன்றைய நிலவரப்படி, ஜிஎஸ்டி வசூல் ₹1.62 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.


Next Story