கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக புகார் 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு


கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக புகார் 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
x
தினத்தந்தி 30 Jun 2023 9:43 PM GMT (Updated: 1 July 2023 8:25 AM GMT)

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. உள்பட 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளதாக பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

விளக்கம் கேட்டு நோட்டீசு

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு உள்ளூர் நிர்வாகிகளில் உள்ள கோஷ்டி பிரச்சினைகள் பகிரங்கமாயின. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி கொண்டனர். இது கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரேணுகாச்சார்யா, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோசுக்கு எதிராக பகிரங்கமாக பேசினார். அதுபோல் பசனகவுடா பட்டீல் யத்னால் உள்பட 10 நிர்வாகிகளும் கட்சிக்கு எதிராக பேசியிருந்தனர்.

இந்த நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்ததாக பசன கவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., சரன்டிமத், பிரதாப்சிம்ஹா எம்.பி., தாசரஹள்ளி முனிராஜு, ரமேஷ் கவுடா, ஏ.எஸ். பட்டீல் நடஹள்ளி, ரேணுகாச்சார்யா உள்ளிட்ட 11 பேருக்கு விளக்கம் கேட்டு பா.ஜனதா ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீசு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்கக்கூடாது

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் பகிரங்கமாக கருத்து கூறிய பசன கவுடா பட்டீல் யத்னால்

எம்.எல்.ஏ., சரன்டிமத், பிரதாப்சிம்ஹா எம்.பி., தாசரஹள்ளி முனிராஜு, ரமேஷ் கவுடா, ஏ.எஸ். பட்டீல் நடஹள்ளி, ரேணுகாச்சார்யா உள்ளிட்ட 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளோம். ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளோம். உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம். cஅவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.


Next Story