நடிகர் சுதீப்புக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்


நடிகர் சுதீப்புக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சுதீப்புக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். அவர் வருகிற 14-ந்தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம் என தெரிகிறது. இதற்கிடையே நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு பிரசாரம் செய்ய இருப்பதால், அவரது திரைப்படம், உருவப்படம் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க கோரி ஏற்கனவே சிவமொக்கா சேர்ந்த வக்கீல் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில செய்திதொடர்பாளரும், சட்டபிரிவு பொதுச்செயலாளருமான பிரதீப் குமார், நடிகர் சுதீப்புக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் நடிகர் சுதீப் ஒரு கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அவரது திரைப்படங்கள், விளம்பரங்கள், டி.வி.நிகழ்ச்சிகள் ஒளிபரபரப்பப்பட்டு வருகிறது. எனவே அவரது திரைப்படங்கள், டி.வி. நிகழ்ச்சிகளையும், விளம்பரங்கள், போஸ்டர்களையும் தடை செய்ய வேண்டும். சட்டசபை தேர்தல் முடியும் வரை அவரது படங்கள், நிகழ்ச்சிகள், விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது என்று கூறப்பட்டுள்ளது.


Next Story