போலீஸ் தடியடியில் பா.ஜ.க. நிர்வாகி பலி: பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீது வழக்கு
போலீஸ் தடியடியில் பா.ஜ.க. நிர்வாகி பலியான சம்பவத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.
பாட்னா,
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் நடைபெறும் ஊழலை கண்டித்தும், ஆசிரியர் நியமனத்தில் குடியுரிமை கொள்கை திருத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பா.ஜ.க.வினர் கடந்த 13-ந் தேதி தலைநகர் பாட்னாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் பலியானார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது பாட்னா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த அரசியல் ஆர்வலர் கிருஷ்ணா சிங் கல்லு என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கில் பாட்னா மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story