மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்
மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்
பெங்களூரு ஜே.பி.நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கனகபுரா மெயின்ரோட்டில் சாலையோரம் குப்பை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த பல மாதங்களாக அங்கு குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அள்ளவும், கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமசாமி, ஜே.பி.நகர், பெங்களூரு.
Related Tags :
Next Story